சொக்லேற் கனவுகள் 31 - கோபிகை!!


 "பாட்டீ.....பாட்டீ...."

கூப்பிட்டபடி வந்த 

ஆதியின் குரலை

அடையாளம் கண்ட அனுதி

அறைக்குள் நுழைந்து

கதவை சாத்திக்கொண்டாள்.....


கண்ணில் சிறு வலியோடு

தாத்தாவைப் பார்த்த பாட்டிக்கு

தலையசைத்து பதில் தந்தார் 

தாத்தா பேரம்பலம். 


கதவருகில் நின்றபடி

ஆதி கூப்பிட,

அவளிடமிருந்து 

எந்தப் பதிலும் இல்லை. 


பாட்டியின் முகம்

தொங்கிப் போனது...

பாட்டிக்கு ஆதியென்றால்

சற்றே பிரியம் கூட...


பேத்தியின் கோபத்தில் 

தாத்தாவுக்கு சிரிப்பு....

அவருக்கு எப்பவும்

அனுதியென்றால் காணும்...


முறைத்த பாட்டியிடம், 

"உனக்கு வராத கோபமா?,

என் பேத்திக்கு குறைவுதான்" 

என்றவர்,


"உன் பேரன் மட்டும்

கெஞ்ச கூடாது, 

நீ கோவிச்சா நான் மட்டும் 

கெஞ்சவேணும்....

நல்ல ஞாயம் போ...!"

என்றார். 


"இப்ப ஏன் நீங்கள்

சந்தில சிந்து பாடுறீங்கள்?"

கனல் கக்க பாட்டி கேட்டதில்

கப்சிப்பென அடங்கிப்போனார்

தாத்தா.....


சற்றே அழுத்தி 

கதவைத் தள்ள நினைத்து 

கையை வைத்த ஆதி, 

அப்போதுதான் பார்த்தான் 

அது திறந்துதான் கிடந்தது....


வீம்பு கொப்பளிக்க

விழிமூடிப்படுத்திருந்தவளை

நின்றபடியே பார்த்துவிட்டு

திரும்பிவிட எத்தனிக்க,


'கண்ணைத் திறக்காதே' என

மூளை எச்சரித்தாலும்

'எழுந்திரு அனுதி' என

மனம் முரண்டியது 

இவளுக்கு. 


மனம் வெற்றிக்களிப்பிலாட, 

அவன் விலகிவிடுமுன்

எழுந்து அமர்ந்துகொண்டாள்

அனுதி.... 


விருட்டெனத் திரும்பிய ஆதி,

காதை கைகளால் பிடித்தபடி

"அனுதிமா....அனுதிம்மா...."

என்றான் செல்லக் குறும்புடன்...


ஓரடி உயரத்தில்

வளர்ந்துநின்ற கோபம்

அவனுடைய இந்த அழைப்பில்

அவசரமாய் தரை தொட்டது....


"உன் கோபம் நியாயந்தான்

அனுதிம்மா....."

அவன் சொன்னதும்

விழிகளை விரித்தாள் அனுதி. 


உள்ளம் அவளுக்கு 

உரத்துச் சொன்னது,

'ஆதிக்கு இருப்பது

ஒட்டியே கிடக்கும் 

அன்பு மனசென்பதை.....'


கனவுகள் தொடரும்

கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.