கொரோனா பிடியில் மனிஷா யாதவ்

 


நடிகை மனிஷா யாதவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு எண் 18/9 படத்தில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், த்ரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 28-2, ஒரு குப்பை கதை, சண்டிமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ட்விட்டரில் மனிஷா யாதவ் கூறியதாவது:

“எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். விரைவில் மீண்டு வருவேன் என நம்பிக்கையுடன் உள்ளேன். பெரிய அளவில் பிரச்னை இல்லை. சிலசமயங்களில் மட்டும் மூச்சுத் திணறுகிறது. கரோனா வராமல் தவிர்ப்பதுதான் நல்லது. அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்.” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.