இரண்டாவது டோஸ்!

 


சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டார்.

தேர்தல் முடிந்த பின்னர் ஓய்வுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார். ஆறுநாட்கள் ஓய்வுக்கு பின்னர் இன்று சென்னை திரும்பினார். இதையடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”இரண்டாவது டோஸை #CovidVaccine இன்று எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்புள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்! நம்மையும் – நாட்டு மக்களையும் பாதுகாப்போம்’’என்று தெரிவித்துள்ளார்.


கடந்த மார்ச் 9ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் ஸ்டாலின் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

வினிதா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.