சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

 


வெளிநாடுகளிலிருந்து திரும்பி வரும் இலங்கையர்களால் மலேரியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

“சமீபத்தில், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் மலேரியாவை ஏற்படுத்தும் நுளம்புகள் இனங்காணப்பட்டதாக டாக்டர் அனுலா விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்கள் மலேரியா நோயின் காவிகளாக இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“வெளிநாட்டிலிருந்து திரும்பி இலங்கை வந்த எவருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால்,அவர்கள் வைத்தியர்களிடம் சென்று பரிசோதிக்கும் பொழுது தாங்கள் வெளிநாட்டில் இருந்து வந்ததை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்” என்று சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் டாக்டர் எஸ். எம். அர்னால்ட் கூறினார்.

மேலும் மேற்படி அறிகுறி கொண்டவர்கள் என சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபருக்கும் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.