இலங்கையில் உருமாறிய கொரோனா

 


இலங்கையில் கொரோனா வைரஸின் உருமாறிய தாக்கம் உள்ளது என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் பீடத்தின் நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் நீலிகா மலாவிஜ் தெரிவித்தார்.

இந்த புதிய மாறுபாடு இலங்கையில் முதலாவது மற்றும் இரண்டாவது கொரோனா அலைகளில் கண்டறியப்பட்ட மாறுபாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மாறுபாடு என்ன என்பது தொடர்பில் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

“இந்த வைரஸால் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த நேரத்தில் அனைவரும் முககவசங்களை அணிந்துகொண்டு சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது என்றும் பேராசிரியர் நீலிகா மலாவிஜ் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.