ரிஷாத் மற்றும் ரியாஜ் கைது!

 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் இன்று(24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

“குற்றப்புலனாய்வு திணைக்கள உறுப்பினர்கள் (சீ.ஐ.டி) எனது பௌத்தாலோக மாவத்தையில் உள்ள எனது வீட்டினை அதிகாலை 1.30 மணியளவில் சுற்றிவளைத்து என்னை கைது செய்ய வந்துள்ளனர். அவர்களிடம் கைது செய்யப்படும் வகையில் பிடியாணைகள் இருக்கவில்லை. எனது சகோதரரையும் கைது செய்துள்ளனர். நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், எல்லாவிதத்திலும் நான் சட்ட ரீதியாக ஒத்துழைப்பு வழங்கினேன். இது அநியாயம்,” என முன்னாள் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டிருந்தார்.

இதேவேளை, தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தமது சகோதரர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும், தம்மைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்னை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகர் அறிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.