நித்யா மேனனின் வைரல் வீடியோ!

 


’180’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’வெப்பம்’ ’காஞ்சனா 2’ விஜய்யின் ’மெர்சல்’ சூர்யாவின் ’24’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நித்யா மேனன்.


சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நித்யா மேனன், அவ்வப்போது தனது கிளாமரான மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ஃபாலோயர்களின் லைக்ஸ்களை பெற்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்தின் போது அணியும் வெள்ளை உடையுடன் அவர் எடுத்துள்ள இந்த போட்டோஷூட்டில் குழந்தை ஒன்றுக்கு லிப்கிஸ் கொடுப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகை நித்யா மேனன் தற்போது இரண்டு தெலுங்கு படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.