மனோ மாஸ்டர் நினைவுகளுடன்..!!


கருணா வரலாற்று துரோகத்தை இழைத்தபோது அப்போது தராக்கி சிவராமின் பெயரும் கேள்விக்குட்படுத்தப்பட்டது.

எனக்கு தெரிந்த வரையில் அப்போது தராக்கி சிவராம் ஒருத்தரை தொடர்பு கொண்டு அவருக்கு மட்டும் தன்னிலை விளக்கம் அளித்தார். அவர்தான் மனோ மாஸ்டர்.

அடுத்து கருணாவின் துரோகத்தைக் கண்டித்தும், வன்னி பின் தளத்தின் தேவை குறித்தும் அதன் படைத்துறை மூலோபாய சிந்தனைகளை விபரித்தும் சிவராம் “வீரகேசரியில்’ கருணாவை விளித்து ஒரு கடிதம் எழுத முன்பாகவும் சிவராம் தொடர்பு கொண்டு பேசிய ஒரு ஆளுமை மனோ மாஸ்டர் மட்டுமே..

அன்று மனோ மாஸ்டர் சிறிது சலனப்பட்டிருந்தாலும் வரலாறு வேறு வகையில் எழுதப்பட்டிருக்கும்..

‘வெற்றி தோல்வி முக்கியமில்லை, அடுத்த தலைமுறைக்குத் தெளிவான வரலாற்றையே விட்டுச் செல்ல வேண்டும்’ என்ற தலைவரின் கோட்பாட்டிற்கமைவாக அன்று காய்களை நகர்த்தி தென் தமிழீழத்தின் மீது விழ இருந்த கறையை துடைத்து தாயகக் கோட்பாட்டை நிலை நிறுத்தியவர் மனோ மாஸ்டர்.

ஒரு போராளி குறிப்பிட்டது போல் , தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக கடினமாக உழைத்து 29.04.2009 அன்று முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மிக எளிமையான இந்த மனிதன் பற்றிய விரிவான பதிவொன்றை வரலராற்றில் பதிக்கவேண்டியது இந்தப் போராட்டத்தில் அவருடன் பயணித்த அனைவரினதும் கடமையாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.