மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தட்டுப்பாடு!


மட்டக்ககளப்பில் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தேவை அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்புமாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினால் இன்று வெள்ளிக்கிழமை (30) மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையிலே சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பொதுமக்கள் அதிகளவாக நகர்பகுதியில் நடமாடுவதாகவும் ஒரு சில இடங்களில் தனியார் வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இன்றில் இருந்து தனியார்வகுப்புக்கள் தடை விதிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் இதை மீறுவோருக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாராலும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையிலே வழக்கமாக ஒரு நாளைக்கு 4 தொடக்கம் 5 சிலிண்டர் ஒட்சிசன் தேவைப்படுவது வழக்கம் ஆனால் தற்போது அதிகமாமைமை கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவருவதன் காரணமாக ஒரு நாளைக்கு 15 சிலிண்டர் ஒட்சிசன் தேவைப்படுகின்றது.

எனவே இதுவரை காலமும் ஒட்சிசனைப் பற்றி சிந்திக்கவில்லை ஆகவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். அதேவேளை பொலிசார் இராணுவத்தினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் விதிக்கின்ற கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் மாத்திரமே கொரோனா தொற்றை தடுக்கமுடியும்.

அதேவேளை பொதுமக்களை வினையமாக கேட்டுக் கொள்வது மரணச்சடங்குகளில் 25 பேரும் திருமணவீடு அல்லது கோயில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது எனவும் பொது இடங்களில் அனாவசியமாக கூடக்கூடாது எனவும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் உயிர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வீட்டை விட்டுவெளியேறி பொது இடங்களுக்கு செல்லவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த 3ஆம் கட்ட கொரோனா இளம் சந்ததியினரை தாக்குவது அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் இல்லாவிடில் வேறு மாவட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சனையை எதிர்நோக்கவேண்டிவரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.