இன்று தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை!


நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களை இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது, தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சுங்கப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த கொள்கலன்கள் இன்று இலங்கை துறைமுக அதிகாரசபை முனையத்திற்கு மாற்றப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் எப்லடொக்சின் என்ற பதார்த்தம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று தெரிவித்தது.

அத்துடன், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாம் எண்ணெய்க் கொள்கலன்களை விடுவிக்க வேண்டாம் என சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.