இட்லி மாவு போண்டா - சமையல்!


தேவையான பொருட்கள்:


1. இட்லி மாவு - 2 கப்

2. சின்ன வெங்காயம் - 1 கப்

3. பச்சை மிளகாய் - 3 எண்ணம்

4. தேங்காய் துருவல் - 1/4 கப்

5.கடுகு - 1/2 தேக்கரண்டி

6. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

7. கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி

8. கறிவேப்பிலை - சிறிது

9. உப்பு - தேவையான அளவு

10. எண்ணெய் - தேவையான அளவு

11. இஞ்சி - சிறிது.

செய்முறை:

1. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சிறிதாக நறுக்கி வைக்கவும்.

2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.

3. தாளிசத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து வதக்கவும்.

4. நன்கு வதங்கியதும் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.

5. வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்து, சிறு சிறு போண்டாக்களாக உருட்டிப் போட்டு, நன்கு வெந்ததும் எடுக்கவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.