தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம்!


முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது, வார இறுதி நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகிறது.

பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், கடந்த அமர்வில் தங்கம் விலையானது பலத்த ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று சரிவில் காணப்படுகிறது.

இது தற்போது 1.85 டாலர்கள் குறைந்து, 1765.10 டாலர்களாக காணப்படுகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்கள் லாபத்தினை புக் செய்த நிலையில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஏனெனில் தங்கத்தின் முக்கிய லெவலான 1760 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது.

சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையினைப் போலவே, வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலையிலும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 0.28% சரிந்து, 25.892 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 108 ரூபாய் குறைந்து, 47,067 ரூபாயாக காணப்படுகிறது.

தங்கம் விலையானது கடந்த அமர்வில் 47,175 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 47,099 ரூபாயாக தொடங்கியுள்ளது.

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியில் விலையானது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் காணப்படுகிறது.

தற்போது கிராமுக்கு 71.90 ரூபாயாகவும்,. இதே கிலோவுக்கு 71,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 24 கேரட் தங்கம் விலை தூய தங்கம் (24 கேரட் தங்கம் விலை ) விலையும் இன்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 4,759 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 38,072 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 47,590 ரூபாயாகவும் காணப்படுகிறது.இதுவும் தொடர்ச்சியாக 4 நாள் சரிவினைக் கண்டு வருகின்றது.

வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியில் விலையானது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் மாற்றமில்லமல் காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 71.90 ரூபாயாகவும்,. இதே கிலோவுக்கு 71,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தங்கம் விலையானது இரண்டாவது வாரமாக ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

அவ்வப்போது விலையானது குறைந்திருந்தாலும் மொத்தத்தில் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. நிபுணர்கள் பல நாட்களாக 1760 டாலர்களை உடைத்தால் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்ற கூறி வந்த நிலையில், நேற்று அதனை உடைத்துக் காட்டியுள்ளது.

தங்கம் விலையானது இன்று சற்று சரிவினைக் கண்டுள்ள நிலையில், இந்திய சந்தையில் அதன் சப்போர்ட் லெவல் 45,880 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 47,740 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1760 டாலர்களுக்கு மேலேயே இருக்கும்பட்சத்தில், 1820 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க சில்லறை விற்பனையில் ஏற்ப்பட்ட மீட்பு, வேலையின்மை நலன் குறித்தான அறிவிப்புகள், தங்கத்தின் விலை சரிவுக்கு வழிவகுத்தது. எனினும் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது தங்கம் விலை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இது பொருளாதார சரிவுக்கு மீண்டும் வழிவகுக்குமோ, என்ற அச்சத்தினையும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டாலும், தற்போது வெளியாகி வரும் சில காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. எனினும் குறுகிய கால நோக்கில் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.