தற்கொலைச் சிரிப்புகள் - ஜோக்ஸ்!


ஒருவர்:
 விளம்பரத்தில நடிக்க கூப்பிட்டதும் அந்த நடிகர் எலி மருந்தைப்போய் ஏன் குடித்தார்?

மற்றவர்: அவர் எதையும் பயன்படுத்திப் பார்க்காமல் சிபாரிசு செய்யமாட்டாராம்

*****

காதலன்: தற்கொலை செய்யப் போகிற போது நகையோட போகனுமா?

காதலி: அப்பதான் பத்திரிக்கையில போடுற படம் அழகாயிருக்கும்.

*****

பாடகர்: என் பாட்ட கேட்க இவ்வளவு தூரம் வரணுமா? எனக்குப் பெருமையா இருக்கு!

ரசிகர்: அவசரத்திற்குத் தற்கொலை செய்ய எந்தக் கருவியும் கிடைக்கலயே...!


ஒருவர்: தற்கொலை செய்ய தூக்கு கயிறு வாங்கப் போனீயே என்னாச்சு?

மற்றவர்: ரெண்டு கயிறு வாங்கினா ஒன்னு இலவசமாம். அதான் இரண்டு கயிறுக்கு ஆள் தேடிகிட்டிருக்கேன்.

*****

ஒருவர்: ஹெல்மெட் போட்டு கிட்டு ஏன் தற்கொலை செய்யப்போறீங்க?

மற்றவர்: முகம் தெரியாமல் போனால் இன்சுரன்ஸ் கிடைக்காதாம்...!

*****

தூதன்: போரிடாமலே வெற்றிக் கொடியை ஏற்றிக்கொள்ள கயிறு பரிசளித்த உங்களுக்கு எங்கள் அரசர் நன்றி தெரிவிக்கச் சொன்னார்

எதிரி அரசன்: போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடிய உங்கள் அரசனுக்கு நான் கொடுத்த தூக்குக் கயிறுடா அது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.