உடன் அமுலுக்கு வரும் வகையில் பல பகுதிகள் முடக்கம்!
நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் பல கிராம சேவர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகவலை கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான ஜெனரல் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகியவையும், புத்தல பிரதேசத்தில் ரஹதன்கம, உஹன பிரதேசத்தின் குமாரிகம, மாத்தளை மாவட்டத்தின் அலுகொல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை