மணிவண்ணன் மீது பாய்ந்த இக்கேள்விகளுக்கு எவ்வாறு பதிலிறுக்கப்போகிறார்?


மணிவண்ணன் நிலைபற்றி பலர் பலவிதமாக எழுதுகிறீர்கள், நேற்று சில தமிழீழத்தேசியப்பற்றுள்ள சிங்கள நண்பர்களோடு கதைத்துக்கொண்டிருந்தபொழுது அவர்கள் சில கேள்விகளை முன்வைத்தார்கள்.

 
மாநகரத்தூய்மைக்கான மணிநடவடிக்கைகளைச் சரியென்று வாதாடுபவர்களுக்கான கேள்விகள் இவை. மணிவண்ணன் ஓர் சட்டவாளர் என்ற அடிப்படையில் இந்தக்கேள்விகளை நோக்கவும்.
 
1. மணிவண்ணனைக் கைதுசெய்த TID இனர் அவரை நீதிமன்றில் நிறுத்தியபின்னர், மணிவண்ணன் செய்தது குற்றம் என ஒப்புக்கொள்ளவைத்து இரண்டு இலட்சம் ரூபா பிணையில் அவரை வெளியே எடுக்கிறார் சுமந்திரன். (சுமந்திரன் யாரென்பதற்கு இங்கே விளக்கம் தேவையில்லை). " மாநகரத்தின் தூய்மைக்காக நான் செய்தது மக்களுக்கான சேவை, அது குற்றமே அல்ல" என மணிவண்ணன் தரப்பு வாதாடாதது ஏன் ? 
 
 
2. மணிவண்ணன் வெளியே வந்ததும், "மணிவண்ணனுக்கு முதல் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது" என டக்ளஸ் அறிக்கை விடுகிறார். மணிவண்ணன் செய்தது குற்றமே அல்ல அது சேவை என்றால் "மன்னிப்பு" எதற்காக ? 
 
 
3. மணிவண்ணனைக் கைதுசெய்தது சாதரண இலங்கைக் காவல் துறை அல்ல. TID இனரே கைதுசெய்தார்கள். மாநகரத்திற்கான சேவை ஒன்றும் "புலிகளுக்கு உடந்தை" என்ற அளவில் வராது. தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதும் "புலிகளுக்குஉடந்தை" என்றால் இவர்கள் அழிக்க நினைப்பது புலிகளை மட்டுமல்ல. தமிழ் மக்களையே அழிக்கநினைக்கிறார்கள் என மணிவண்ணன் தரப்பு குறிப்பிடாததன் காரணம் என்ன ? 
 
 
4. " மாநகரசபை முதல்வரையே கைதுசெய்துவிட்டார்கள்" என்று உலகமே அறிக்கைவிட்ட இந்தப்பொழுதில், இதை மணிவண்ணன் தமிழ்மக்களுக்கான உரிமைப்போராட்டமாக மணிவண்ணன் மாற்றமுயலாதது ஏன் ? 
 
( மீளவும் குறிப்பிடுகிறேன் மணிவண்ணன் சாதாரணநபரல்ல. அவர் நகரமுதல்வர் மற்றும் சட்டநுணுக்கம் அறிந்தவர்")
 
 நான் செய்தது குற்றம் அல்ல, அதைக்குற்றமாக வடிவப்படுத்திப் பிணையில் வெளிவர நான் விரும்பவில்லை" என மணிவண்ணன் ஓர் அறிக்கைவிட்டிருந்தால், அத்தனை வெளிநாட்டுத் தூதுவர்களும், யாழ்ப்பாணம் வந்திருப்பார்கள்) 
 
 
இக்கேள்விகளுக்கு எவ்வாறு பதிலிறுக்கப்போகிறோம்..?
(இந்தக்கேள்விகளுக்கு ஒரேவரியில் அவர்களே பதிலும் சொன்னார்கள், அதைப் பின்னர் பதிவிடுகிறேன்)
 
-தேவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.