அழகியல் பொழுதுகள்!!
இவளின்
காலைப் பொழுதுகள்
உன்னுடன்தான் துவங்குகிறது...
கோடை காலத்திலும்
வசந்தத்தை அள்ளித் தரும்
அதிசய உயிரினம் நீ...
இவளைக் காணும் நேரங்களில்
எங்கிருந்தோ தென்றல் வந்தது போல்
உனக்குள் ஏனிந்த சிலிர்ப்பு...
வாசத்தையும், பாசத்தையும்
இவளின் மீது நிறைத்து
மகிழ்கிறாய் அழகாய்...
பூஜைக்காக
உன்னை கொய்யும் போதும்
புன்னகை மாறாமல்...
உந்தன் ஒரே வருத்தம்
இவளின் கூந்தல் சேர முடியாத
சோகம் மட்டுமே....
நீயோ
இவளை சேர நினைக்கிறாய்...
இவளோ
உந்தன் ஆயுள் நீண்டிட நினைக்கிறாள்..
வருந்தாதே...
இரண்டுமே நேசம் தானே..💚
காவியப் பெண் ✍️
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை