திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட மன்னார் மாவட்டம்!


எதிர்வரும் 24 ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் நிர்வாகத் தெரிவில் மன்னார் மாவட்டம் வாக்களிக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் மன்னாரில் இருந்து தாய்ச்சங்கத்திற்கான நிர்வாகத்தில் தமது பிரதிநிதி ஒருவரை பிரேரிக்கும் தகுதியையும் இழந்துள்ளதாக குரிப்பிடப்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து மெய்வல்லுனர் தாய்ச்சங்கத்திற்கு நிர்வாக ரீதியான பிரதிநிதி ஒருவர் தெரிவாகிவிடக்கூடாது என திட்டமிடப்பட்ட ரீதியில் மன்னார் மவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தனியே மன்னார் மெய்வல்லுனர்களுக்கு மட்டுமான தடை அல்ல ஒட்டுமொத்த மன்னார் மாவட்ட விளையாட்டு ஆர்வலர்களுக்குமான ஒரு தடை என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். விளையாட்டுத்துறையினை பொறுத்தவரையில் மன்னார் மாவட்டம் கணிசமான அளவு பங்களிப்பினை மாகாண, தேசிய, சர்வதேச ரீதியில் வழங்கியுள்ளது.

இந்நிலையில் தேசிய ரீதியிலான தாய்ச்சங்கங்களில் மாவட்ட ரீதியில் விளையாட்டுக்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களின் பங்களிப்பு மிக அவசியமானதொன்று என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகவே அவ்வாறானதொரு பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் ஆக்கச்செய்வதற்காக நடைபெறும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இந்த திட்டமிடப்பட்ட புறக்கணிப்புச் செயற்பாட்டிற்கு எதிராக மன்னார் விளையாட்டு ஆர்வலர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே எதிர்காலத்தில் மன்னார் மாவட்டத்தினதும் விளையாட்டு தாய்ச்சங்கங்களுக்கு இடையிலான பிரதிநித்துவங்கள் உறுதிசெய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.