முல்லைத்தீவிலும் ஒருவர் கைது - எதற்கு தெரியுமா?


விடுதலைப்புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் இன்று ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்,  யாழில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பினை பேணிய குறித்த புதுக்குடியிருப்பு குடும்பஸ்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

45 அகவையுடைய பாடசாலை வீதிவள்ளிபுனம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த குடும்பஸ்தரே இன்று அதிகாலை பயற்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும்  கைதான நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.