தமிழீழத் தேசிய செயற்பாட்டாளர் திரு. நடராசா பாலசிங்கம் அவர்கள் இன்று மாலை இயற்கை எய்தினார்!

பாலா அண்ணா என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் திரு. நடராசா பாலசிங்கம் அவர்கள் இன்று 21 ஏப்ரில் 2021 மாலை பிரான்ஸில் இயற்கை எய்தினார். மிக நீண்டகால தமிழீழத் தேசிய செயற்பாடுகளில் தம்மை அர்ப்பணித்து கடமையாற்றிய அன்னாரின் மறைவு தமிழீழ மக்களுக்கும் விடுதலைப்பயணத்திற்கும் பாாிய இழப்பாகும். 


தமிழீழ விடுதலையையும் அதனை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகளையும் ஆழமாக நேசித்த இந்த அற்புதமான மனிதரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்களைத் தொிவிக்கும் இவ்வேளையில் அவரது இழப்பினால் துயருறும் அவரது உறவினர் நண்பர்களதும் போராளிகளினதும் துயரங்களைப் பகிர்ந்துகொள்கின்றோம்.


 பாலா அண்ணாவின் ஆன்ம நிறைவிற்காக இயற்கை அன்னை அருள்புாிவாராக.அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் .#பிரிவால் துயரமடைந்திருக்கும் அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் அனைவருக்கும் #தமிழ்_அருள் #இணைய தாள நிர்வாகம் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.