புலம் பெயர் தமிழர்கள் ஜேர்மனியில் போராட்டம்!


ஜேர்மனியில் அகதிகள் உரிமைக்கான அமைப்பு முன்னெடுத்த “நாடுகடத்துவதற்கு பதிலாக தங்குவதற்கான உரிமை” என்ற பொருள்பட்ட போராட்டத்தில் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் பல்லின மக்களோடு இணைந்து தமது பக்க நியாயத்தையும் கோரிக்கைகளையும் ஜேர்மனிய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வானது நேற்று மாலை ஜேர்மனிய நேரம் 16.00 மணிக்கு பாடன்வூட்டன்பேர்க் மாநிலத்தின் நகரங்களான ஸ்ருட்காட் மற்றும் பிரைபோக் ஆகிய நகர மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றுள்ளது.

அண்மையில் திட்டமிட்ட நடவடிக்கை ஒன்றை ஜேர்மனிய அரசு நாடு தழுவிய அளவில் செய்திருந்தது.

அதில் அகதி நிலை வதிவிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு பிரத்தியேக சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கை திருப்பியனுப்பி தமிழர்களின் நல் எண்ணங்களில் பெரும் ஏமற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் Flüchtlingsrat Baden-Württemberg மற்றும் Seebrücke ஆகியவை இணைந்து ஜேர்மன் அரசுக்கு பெரும் அழுத்தத்தை பிரயோகித்து நாடுகடத்தப்படும் அகதிநிலைக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தாமல் இங்கே வதிப்பதற்கு அனுமதிக்குமாறு குரல் எழுப்பினர்.

இதன்போது ஜேர்மனிய மொழியில் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவண்ணம் போராட்டக்காரர்கள் கைகளில் தாங்கியிருந்தனர்.

தமது நாட்டில் இருந்து உயிர் அச்சுறுத்தல் இருப்பதால், உயிரைக் காப்பாற்ற என்று நாட்டு விட்டு வெளியேறி இங்கே அகதியாக வாழ உரிமை கேட்டவர்கள் அவர்களை நாடுகடத்துவதன் ஊடாக மீண்டும் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்க வைக்க வேணாம் என்ற கருத்துக்களோடு பல பதாதைகளைத் அவர்கள் தாங்கி நின்றார்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.