சுமந்திரன் சரவணபவனின் ஏரியாவிற்குள்!


முன்னாள் எம்.பி சரவணபவன் பதவியில்லாமல் இருக்கும் நிலையில் வீழ்த்த இது சரியான சந்தர்ப்பம் என கருதி சுமந்திரன் , நேற்று வலிகாமம் மேற்கு பிரதேசசபை உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

கட்சி தலைமைக்கு தெரியாமல் இடம்பெற்ற இந்த சந்திப்பு எதற்காக நடத்தப்பட்டது என்பதற்கு விளக்கமில்லை. இந்நிலையில் இது சுமந்திரனின் வழக்கமான ஆள் பிடிக்கும் நகர்வாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வலிகாமம் மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் பலர் முன்னாள் எம்.பி சரவணபவனினால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். பதிவியில் இருக்கும்வரை ரவணபவன் பக்கம் இருந்த தவிசாளர் உள்ளிட்ட பாதி உறுப்பினர்கள் இருந்த நிலையில் இருந்தே, இப்போது மற்ற பக்கம் பல்டியடித்து விட்டனர். ஆனாலும் நேற்று இடம்பெற்ற சுமந்திரனுடனான சந்திப்பில் பாதி உறுப்பினர்கள் கூட போகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சில நாட்களின் முன்னர் அங்கு ஒரு சர்ச்சை நடந்தது. நியமன பட்டியல் உறுப்பினரான பேக்கரி உரிமையாளர் ஒருவரை பதவியை விட்டு விலகி, இன்னொருவருக்கு சந்தர்ப்பம் அளிக்கும்படி சரவணபவன் தரப்பு கேட்டதாகவும், அந்த பேக்கரி உரிமையாளர் கடிதத்தை வழங்கியதாகவும் பேச்சு வந்தது.

கூட்டமைப்பின் நியமன பட்டியல் உறுப்பினர்கள் நியமிக்கப்படும் போது, இரண்டரை வருடம் வழங்கப்படுவதாக கூறி, அடுத்த இரண்டரை வருடம் அடுத்தவருக்கு வழங்குவதாக கூறப்பட்டது.

எனினும் கூறியபடி அது நடக்கவில்லை. இந்த நிலையில் பருத்தித்துறையில் சுமந்திரனின் வலது கை ஒருவரால் இதில் ஏமாற்றப்பட்ட ஒருவர் இது பற்றி தொடர்ந்து முகநூலில் பதிவிட்டு வருகிறார். தன்னிடம் பலவந்தமாக விலகல் கடிதம் கோரப்பட்டதாக பேக்கரி உரிமையாளர் கூறி, அதை கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிற்கும் முறையிட்ட நிலையில் மாவை தலையிட்டு, அந்த பிரச்சனையை முடித்து வைத்தார்.சரவணபவனும் அந்த விவகாரத்தை விட்டுவிட்டார்.

இந்த நிலையில் பேக்கரி உரிமையாளரினால், பலவந்தமாக கடிதம் பெறப்பட்டதாக பரவலாக கூறப்பட்ட நிலையில் , தன்னிடம் யாரும் பலவந்தமாக கடிதம் பெறவில்லையென்றும், சுயவிருப்பின் அடிப்படையில் கடிதம் வழங்கியதாகவும், அவர் தரப்பில் கூறப்பட்டதாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் நேற்று திடீரென இந்த கூட்டம் கூட்டப்பட்டு, பேக்கரி உரிமையாளரின் பிரச்சனை பேசப்பட்டபோது தன்னிடம் பலவந்தமாக கடிதம் வாங்கப்பட்டதாக பேக்கரி உரிமையாளர் கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அப்படி பலவந்தமாக கடிதம் பெற முடியாது, ஏற்கனவே வழங்கப்பட்ட கடிதத்திற்கு மறுப்பு கடிதமொன்றை அனுப்புங்கள் என சுமந்திரன் ஆலோசனை கூறியதுடன், அந்த பிரச்சனையை பற்றியே நீண்டநேரம் விவாதித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.