30 ரயில் சேவைகள் இரத்து

 


எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் அலுவலக ரயில்கள் உட்பட கிட்டத்தட்ட 30 ரயில் சேவைகள் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுநாள் (14) இரண்டு நாட்கள் மாத்திரம் ரயில் சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், புத்தாண்டை முன்னிட்டு கிராமப்புறங்களுக்கு பயணிப்பவர்களுக்கும், மீண்டும் கொழும்பு திரும்புவோருக்கும் வழக்கம் போல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.