வவுனியாவில் இரவு வேளையில் இடம்பெற்ற விபத்து!


வவுனியா குருமன்காட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை முற்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இரவு 7.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக அவ்விடத்தில் நின்றவர்கள் தெரிவித்த நிலையில் முற்சக்கரவண்டியின் சாரதி மது போதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவித்ததும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திய NP QU – 9554 என்ற இலக்கமுடைய நீல நிற முற்சக்கரவண்டியின் சாரதி குறித்த இடத்தில் நிற்காமல் விபத்தை ஏற்படுத்தியதும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு காலதாமதமாக வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் திருநாவற்குளத்தில் உள்ள முற்சக்கரவண்டி சாரதியின் வீட்டிற்கும் சென்றிருந்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.