விவேக் மரணம் குறித்து சிம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட தகவல்!


நடிகர் விவேக், திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

நடிகர் விவேக் தனது 59வது வயதில் உயிரிழந்துள்ளார். தற்போது அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விவேக்கிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சிம்ஸ் மருத்துவமனையின் துணைத்தலைவர் ராஜூ சிவசாமி விளக்கமளித்துள்ளார்.

அதில், நடிகர் விவேக் நேற்று காலை 11 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது நடிகர் விவேக்கிற்கு சுயநினைவோ, நாடித்துடிப்போ இல்லை. அதனை தொடர்ந்து அவரது உடல்நிலையைப் பரிசோதித்து உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது.

விவேக்கின் உடல்நிலை மோசமாக இருந்தது. விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை என அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.