யாழில் காணி இல்லாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!


யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த காணி இல்லாத 233 பேருக்கு காணி கொள்வனவு செய்வதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் கூறியுள்ளார்.

மாவட்டத்தில் 3056குடும்பங்கள் இடம்பெயர்ந்து நண்பர்கள் உறவினர்கள் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் அவர்களை விட 409 குடும்பங்கள் தற்காலிக நலம்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு 86 குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் காணி வாங்கிக் கொடுத்து வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 319 குடும்பங்கள் காணி வீடு இல்லாதவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் 90 பேருக்கு சொந்தக் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளது.

தற்போது 233 பேருக்கு காணி வாங்குவதற்கான முழுமையான நிதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் 75 பேருக்கு காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏனையோருக்கும் விரைவாக காணி வழங்குவதற்கான மதிப்பீடுகள் மாற்றும் நில அளவை படம் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றதாகவும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.