நாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு!


பண்டிகை நாட்களை முன்னிட்டு இக் காலப் பகுதியில் பொது இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அதன்படி தங்க நகைகள் கொள்ளை, பணப்பைகள் திருட்டு, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் திருட்டு போன்ற சம்பவங்கள் இக் காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மோட்டார் சைக்கிள் சாரதிகளின் குற்றங்களை குறைக்க போலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில் 13,320 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.