இலங்கையின் தூதுவர்களை நிராகரித்த நாடுகள்!


இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொறகொட, கனடாவுக்கான தூதவராக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், சவூதிக்கான தூதுவர் அஹமட் ஏ ஜவாட் ஆகியோரின் நியமனங்களை அந்தந்த நாடுகள் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் மிலிந்த மொறகொடவின் நியமனத்தை இந்தியா தற்போது ஓரளவில் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இருப்பினும் ஏனைய இருவரில் சவூதிக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட அஹமட் ஏ ஜவாட் வெளிவிவகார அமைச்சின் சேவையிலிருந்து ஓய்வுபெற்றிருக்கின்றார்.

அதன் காரணமாக, தற்போது ஹம்சா என்பவரது பெயர் அப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை லெனகல என்பவர் தென் கொரிய தூதுவராகவும், அபொன்சு என்பவரை ஈரான் தூதுவராகவும், சுமித் திஸாநாயக்கவை பிரேஸில் தூதுவராகவும், எத்தியோப்பியா தூதுவராக ஹசந்தி திஸாநாயக்கவை நியமிக்கவும் வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.