இன்று உலகப் புத்தக தினம்!!

 


புத்தகங்கள் என்பது வெறும் தாளும் எழுத்துகளும் அல்ல, அவை எழுதியவரின் எண்ணங்களும் சிந்தனையும். அத்தகு புத்தங்கள் பற்றி சான்றோர் கூறியவற்றைப் பார்ப்போம். 


ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது 

"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா


கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு


என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்


மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா


பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்


ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்


ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்


தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்


நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து

என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.

-ஆபிரகாம் லிங்கன்


ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!

– ஜூலியஸ் சீசர்


உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..

– டெஸ்கார்டஸ்


போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…

– இங்கர்சால்


சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே

விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!

– பிரான்சிஸ் பேக்கன்


புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட

பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!

– லெனின்


உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!

– ஆஸ்கார் வைல்ட்


உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!

– சிக்மண்ட் ஃப்ராய்ட்


பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…

– மாசேதுங்

அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்

ஆனால் புத்தகம் 

திறக்கும் போதெல்லாம் வெடிக்கும்.


 புத்தகத்தை நீங்கள் மேலிருந்து கீழ்ப்படித்தால்

கீழே இருக்கும் உங்களை மேலே உயர்த்தும் _ 

நெல்லை ஜெயந்தர்.


 என் மனம் விரும்பும் நூல்களைக் கொடுங்கள்

    வாழ்நாள் முழுதும் சிறையில் வாழ       

    சம்மதிப்பேன்_ மாஜினி.


பயன்படுத்தாதப் புத்தகம் வெறும் காகிதக்கட்டுதான்_ சீன பழமொழி


  புத்தகம் காலத்தின் விதைநெல்_ பாரதிதாசன்


ஒரு புத்தகம் 100 நபர்களுக்குச் சமம் _ நியூட்டன்


  வெறும் தாள்களுக்கு இரண்டு இடத்தில் மரியாதை உண்டு... 

ஒன்று பணமாக மாறும்போது....

மற்றொன்று புத்தகமாக மாறும்போது.....


புத்தகங்கள் படிப்பது உறக்கம் வருவதற்கல்ல

     உறங்க விடாமல் செய்வதற்கு.....

     புத்தகம் என்பது உறக்கம்  வராமல்  

     புரட்டுவதற்கு அல்ல...

      நம்மை புரட்டிப் போடுவதற்கு_

       எஸ். ராமகிருஷ்ணன்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.