விவேக் நினைவாக வித்தியாசமாக மரக்கன்றுகளை நட்ட ரம்யா பாண்டியன்!

 


பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்பதும் அவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்பதும் தெரிந்ததே. தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கு அவர் செய்த சேவை எண்ணிலடங்காது என்பதும் குறிப்பாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழகத்தில் ஒரு கோடி மரங்களை நடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார் என்பதும், 33 லட்சம் மரங்களுக்கு மேல் அவர் நட்ட நிலையில் திடீரென அவர் மறைந்தது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் விவேக் விட்டுச் சென்ற பணியை தொடர பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் முயற்சித்து வருகின்றனர். மேலும் விவேக் நினைவாக பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வீடுகளிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வருவது குறித்த செய்திகளையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்


இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் விவேக் நினைவாக வித்தியாசமான முறையில் மரங்கள் நட்டுள்ள செய்தி வெளிவந்துள்ளது. விவேக் தனது 59வது வயதில் காலமான நிலையில் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை திருவள்ளூர் ஆயுதப்படை மைதானத்தில் ரம்யா பாண்டியன் நட்டுள்ளார். அப்போது திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் உள்பட காவலர்களும் உடனிருந்தனர் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.