இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பில் அனைத்து முக்கிய ஸ்தலங்களும்!


இன்று முதல் எதிர்வரும் 5ம் திகதிவரை நாட்டிலுள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்கள் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறைக் கருத்தில் கொண்டு இவ்விஷேட பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு உயிர்த்த ஞாயிறு தினம் ஏப்ரல் 4ஆம் திகதியாகும்.

இதேவேளை 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நிறைவும் நினைவு கூரப்படவுள்ளது.

இதற்காக இராணுவத் தலைமையகம் பாதுகாப்பு படைத்தளபதிகளுக்கு குறிப்பிட்ட மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் தேவையான பாதுகாப்புத் தேவைகளை அடையாளம் காண்பதற்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி பிரதான பாதுகாப்பு திட்டத்தை பொலிஸார் செயற்படுத்தும் அதேநேரம் இராணுவம் தேவையான உதவிகளை வழங்கும் எனவும் உயிர்த்த ஞாயிறைக் கருத்தில் கொண்டு இராணுவத்தினரும் பொலிஸாரும் கூட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயற்படுத்துவார்கள் எனவும் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் தெரிவித்தார்.

2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஹோட்டல்கள், தேவாலயங்களை இலக்குவைத்து மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்களின் போது 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன்

500க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இதன்பின் விஷேட பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.