திமுக வேட்பாளரின் தாயாரால் தமிழகத்தில் பரபரப்பு!


தமிழகத்தில் எதிர்வரும் ஆறாம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளரான பூங்கோதைக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என அவரது தாயாரே கூறி இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுபவர் பூங்கோதை. இவர், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகள். ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் 2 முறை வெற்றிபெற்றுள்ள இவர், கடந்த 2006ம் ஆண்டில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

இதனையடுத்து தற்போது, பூங்கோதை ஆலடி அருணாவுக்கு மீண்டும் ஆலங்குளம் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘தனது மகளுக்கு யாரும் வாக்களிக் வேண்டாம்’ என பூங்கோதையின் தாயார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது கணவர் ஆலடி அருணாவின் பெயருக்கு பெரும் களங்கத்தை ஏந்படுத்தும் வகையில் பூங்கோதை நடத்து வருகிறார் என்றும் அதனால் அவருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமால்லாது தனது மகள் பூங்கோதை மீது அவர் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது தொடபாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

என் மகள் மீண்டும் எம்எல்ஏ ஆகக் கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறேன். பூங்கோதை கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பதாகவும், அவரது மகள் திருமணத்தை லஞ்ச பணம் மூலம் ஆடம்பரமாக நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது கணவரான ஆலடி அருணா நேர்மையானவர், யாரிடமும் லஞ்சம் வாங்காதவர், அவரது மகள் இப்படி பலரிடம் லஞ்சம் வாங்கியும், பலரது இடங்களை சட்டவிரோதமாக வளைத்து போட்டுள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் கமலா அம்மையார்.

திருவண்ணாமலையில் ரெசார்டு, மகாபலிபுரத்தில் ரெசார்டு இதுபோக இன்னும் நிறைய இடங்களை வளைத்துப்போட்டுள்ளார் என்றும், பூங்கோதை மீண்டும் எம்எல்ஏ ஆனால், தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்ய மாட்டார் என்றும் , எனவே அவருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என அவரது தாயார் கமலா பேசியிருக்கும் வீடியோ பெரும் தமிழகத்தில் தற்பொழுது பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.