தடுப்பூசி வரம்பை குறைப்பதாக ரொறொன்ரோ அறிவிப்பு!


 தடுப்பூசி தகுதிக்கான வயது வரம்பை மீண்டும் குறைப்பதாக ரொறொன்ரோ மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8:00 மணிக்கு ரொறொன்ரோ தடுப்பூசி தளங்களில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் சந்திப்பை பதிவு செய்யலாம் என அவர் மேலம் தெரிவித்தார்.

இதுகுறித்து மேயர் ஜோன் டோரி கூறுகையில், ‘ரொறொன்ரோ தனது தடுப்பூசி தகுதி வயதை 10 ஆண்டுகளாக குறைக்க அனுமதிக்க ஒப்புக்கொண்டது.

ரொறொன்ரோவில் ஈஸ்டர் வார இறுதி முழுவதும் சந்திப்பு முன்பதிவுகள் கிடைக்கின்றன. மேலும் நான்கு தடுப்பூசி தளங்கள், மெட்ரோ கன்வென்ஷன் சென்டர் உட்பட வெள்ளிக்கிழமை முதல் இயங்கும்.

இந்த ஈஸ்டர் வார இறுதியில் உங்களால் முடிந்தால் தடுப்பூசி போட தகுதியுள்ள ஒவ்வொரு குடியிருப்பாளரையும் நான் ஊக்குவிக்கிறேன்’ என கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.