மாற்றம் - மீராசதிஷ்!!

 


ஆதவன் வரும் 

முன்னே ஆயத்தமாகிடுவான்.

ஆதவன் கூட இவன்

முகத்தில் விழிக்க

விரைந்து வந்திடுவான்.

காலையில் அனைவரும்

நடுமாடும் முன்னே..

சாலையில் குப்பையை 

நீக்கிடுவான்.

கிருமி நாசினி கொண்டு

அனைவரையும் காத்திடுவான்.

எச்சிலோ எதுவோ

அள்ளி ஒதுக்கிடுவான்.

பிச்சி பூ போல..

புதிய காலை புழர்வதற்குள்

புழுதி பறக்க கூட்டிடுவான்.

அழுக்கை தான் சுமந்து

கிழக்கை வரவேற்பான்.

கீழே கிடக்கும் 

பொருட்களை எல்லாம்

கிளிஞ்சல்களாக எண்ணி

பொறுக்கிடுவான்.

காற்று கடத்தி வந்த

காகிதத்தை கைது 

செய்திடுவான்.

இவன் பாதணிகள்

பழுதடைந்தாலும்..

பாதைகளை பழுதடையவிடுவதில்லை.

தன் உடல் நலம்

குன்றினாலும் பிறர்

நலம் காக்க பொதுநலம்

செய்யும் இவனை..

துப்புரவு பணியாளர்

என சொல்லாமல்...

தூய்மை பணியாளர் என்போம்.

மேன்மையோடு வணங்குவோம்.

அன்பு காட்டா விட்டாலும்

அலட்சிய பார்வையை

அள்ளி வீசாமால்  நடந்திடுவோம்.

அவன் சுத்தம் செய்த பாதையில்.மீராசதிஷ்✍Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.