வாக்களிப்பு மையத்திற்கு காய்ச்சலுடன் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!


திருவண்ணாமலையில் சுமார் 20 பேர் அதிக காச்சலுடன் வருகை தந்ததால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில், பலர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

காலை 9 மணி நிலைவரப்படி தமிழகத்தில் 13.80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 10.58 வீதமான வாக்குகளும், கோவையில் 14.65 வீதமான வாக்குகளும், மதுரையில் 13.56 வீதமான வாக்குகளும், திருச்சியில் 14.03 வீதமான வாக்குகளும், கோவையில் 14.65 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளது.

அதேநேரம் சிங்காநல்லூரில் 2 அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் மேற்படி தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.