டெல்லி கபிட்டல்ஸ் சென்னையை வீழ்த்தியது!


14 ஆவது இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி கபிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கபிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.

சென்னை அணி சார்பில் சுரேஸ் ரெய்னா 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

189 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கபிட்டல்ஸ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.