சமாதானம் பேச வாருங்கள் என அழைத்தே தாக்குதல்!


 யாழில் திருட்டு கும்பலை பிடித்து கொடுத்த இளைஞர் குழுவில் இருந்த பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் படுகாயமடைந்த அவரை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது குறித்த பிரதேசசபை உறுப்பினர் தனது பிரதேசத்தில் பல கொள்ளை சம்பவங்களை அப்பகுதி இளைஞர்களுடன் முறியடித்துள்ளதுடன், கொள்ளை கும்பலை பிடித்து, பொருட்களை மீட்டும் பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றார்.

மேலும் நாவற்குழியில் மோதல் நடப்பதாகவும் சமாதானப்படுத்த வாருங்கள் என அழைத்தே தமீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.