ஒன்டாரியோவில் 4 வார ஊரடங்கு!


 கனடா நாட்டில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு அந்நாட்டின் பிரதமர் டக் போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் 4 வார கால ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கை சீராக உயர்ந்து வரும் சூழலில், வருகிற 3ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 12.01 மணியில் இருந்து இந்த அறிவிப்பு அமலுக்கு வரும்.

இதன்படி, ஒன்டாரியோ மாகாணம் முழுவதும் இந்த அவசரகால நிலை இருக்கும் என கூறியுள்ளார். இந்த மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து 34 பொது சுகாதார மண்டலங்களும் 4 வாரகாலத்திற்கு மூடப்பட்டு இருக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.