முதல்வரை சந்திக்கும் ரஜினி?

 


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.


படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரஜினிகாந்த், பின்னர் காரில் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பானது கொல்கத்தாவில் நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

முதல் அலை முடிந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்படப் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இரண்டு வாரங்கள் முன்புதான் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கினார்கள்.

இதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது. இனி அண்ணாத்த படப்பிடிப்பிற்கு ரஜினிகாந்த் தேவையில்லை ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் படத்தொகுப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசும் வேலையை உடனடியாக தொடங்கவுள்ளனர்.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். டி.இமான் இசை. வெற்றி ஒளிப்பதிவு. ரூபன் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை எல்லாம் முடிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இந்த வருடக் கடைசியிலாவது சாத்தியம் உண்டா என்கிற அச்சம் சினிமா திரையரங்குகள் மத்தியில் எழுந்துள்ளது.

சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பொறுப்பு ஏற்றுள்ள திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதுடன், கொரோனா நிவாரண நிதிக்கான காசோலையை முதல்வரிடம் வழங்க இருப்பதாக ரஜினிகாந்த் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

-இராமானுஜம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.