மே 18 - தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு!!📸

 

குருதியில் தோய்ந்த காட்சியுடன் தமிழின அழிப்புக்கு நீதி கோரல்- பேர்லினில் நடைபெற்ற  கவனயீர்ப்பு   மே 18 - தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் தொடருந்து நிலையத்தில் குருதியில் தோய்ந்த  காட்சியுடன் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் முகமாக வாசகங்களை தாங்கியவாறு இளையோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

   இக் கவனயீர்ப்பு நிகழ்வு குறுகிய  நேரத்தில் பல நூற்றுக்கணக்கானவர்களால் அவதானிக்கப்பட்டதோடு, பல வேற்றின சமூகத்தினர் ஈழத்தமிழர்களுக்கான தமது ஆதரவையும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.