சர்வம் விழி மூடி மறக்குமா?

 


ஈரம் மறந்து

சர்வம் விழி மூடி

கோரம் கொண்டாட

கரம் கோர்த்த

கொடூர நாட்களவை.


மூச்சு திணறிட

பச்சை மண்ணும்

பதறித் துடித்தழ

பாதகர்களில் இன

அழிப்பு வெறியின்

அறுவடை நாளவை..


கால்கள்

போன போக்கில்

சிதறி ஓடினோம்.

தஞ்சம் தருவதாய்

திறந்த வெளிகள்

சிறைச் சாலைகளான

நினைவழியாக் காலமவை.


பார்த்திருக்க

பாத்திருக்க

பூவையரின்

புனிதம்

பறித்தெடுப்பு

பாரா முகமாய்...

உலகம் கடந்த

கொடூரமவை.


மிச்சமாயிருந்த

போர் எச்சங்களாய்

மருந்தின்றி

உணவுன்றி

ஊன் உறக்கமின்றி

மண்ணுக்கே உரமான

கோலமவை.


இழந்தவை

ஏராளமெனினும்

உணர்வுகளை

இழக்காதவர்களாய்

சத்தியத்தின்

கட்டளையை கருத்தில்

கொண்டழுவோம். 

மனங்கள் கனத்த

மாதமதில் உறுதியுடன்

விடியலுக்காய்

உழைப்போம்..

18.05.2021

படங்கள் நன்றி.

Suga rama

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.