45ம் நாள் நீங்கா நினைவுடன்.....🕯🕯

மறு முறை ஒரு முறை வாராயோ...

புன்னகை புரிந்தே மனம்மகிழ்விப்பாய் தேவைகள் அறிந்தே உனைஅழைப்பாய்

கள்ளம் கபடம் அற்ற உள்ளம் கொண்டோனே சோதரன் உனைபெற வரம் அடைந்தேன் அண்ணன் என்னை அரவணைப்பாய் உன்குரலால் நிறைத்திடுவாய் 

அன்னைக்கு நிகராய் அன்பினை பொழிவாய் ஆறுதலாகவும் இருந்திடுவாய் 

ஏனோநீயும் தூரம்போனாய் 

பாரம் நெஞ்சில் தந்துபோனாய்

பூமுகத்தை காண்பதற்கு வழிஇன்றி  ஏனோபோனாய் உன்பிரிவால் வாடுகின்றேன்

உன் நினைவை ஏந்துகின்றேன்

எம் கண்ணீர் கடலாகும்


இமைமூடும் கணமெல்லாம் தினந்தோறும் வருபவனே இரவுகள் நீளுதே.             எம்கனவுகள் போனதே

கொடியின் வேரும் அறுந்துபோனால் மலரின்சிரிப்பும் சருகாய் உதிரும்

புளுதிபடிஞ்ச படத்தபோல நீயும் இருக்காய் எம்மனசில

அன்புத்தூறல் போட்டமேகம்

எம்மைவிட்டுப்போக

யார்தான் இனிமேல் வருவார்

உன்னைபோல

பாசநீரை ஊற்றிவளர்ப்பார்

சிறான்குட்டியே...

சிறான்..சகோதரா...

சிறான்....சகோதரா...

கண்ணோடு வாழ்ந்த சொந்தம்

மண்ணோடு போனதென்ன

எம்மனங்களும் ஏற்கவில்லை

நீ மறுமுறை ஒருமுறை வாராயோ

சிறான்...

நினைவுகள் உனக்கே அர்ப்பணம் .

இன்றும் என்றும் உன் நினைவுடன்


உன் தனுஅண்ணா


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.