சீனாவின் தியான்வென்-1 ரோவர் ஊர்த்தி நாளை செவ்வாயில் தரையிறங்குகிறது.!📸


செவ்வாய் கிரகத்தை ஆராய சீனா Long March 5B ரொக்கெட்டில் அனுப்பிய  தியான்வென்-1 (tianwen-1)  என்ற ரோவர் ஊர்த்தி நாளை (15) ஆம் திகதி தரையிறங்கவுள்ளது. 


லோங் மார்ச் 5 என்ற ரொக்கெட் கடந்த ஆண்டு (2020) ஜூலை 23 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில்  தியான்வென் -1 ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.


இந்த tianwen-1 ரோவர் விண்கலம்  செவ்வாய் கிரகத்தின் உட்டோப்பியா சமவெளிக்கு உட்பட்ட பகுதியில் தரையிறங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


3,300 கிலோமீற்றர் அகலமுள்ள சமவெளி செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய தாக்க பள்ளமாகும். இங்கு நாசாவின் ஆரம்பகால பயணங்களில் ஒன்றான வைக்கிங் 2, என்ற விண்கல ஊர்தி  1976 ஆம் ஆண்டில்  வடக்குப் பகுதியில் தரையிறங்கியது.


அப் பகுதியின் நிலப்பரப்பின் மேல் மற்றும் கீழ்ப்பகுதியிலுள்ள புவியியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்யும். 


வி்ண்கலத்தில் உள்ள  சூரிய மின்தகடுகளின் மூலம் கிடைக்கும் ஆற்றல் மூலம் இயங்கும் தியான்வென்-1 ரோவர் சுமார் 240 கிலோ எடை கொண்டது. 


ரோவரில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை படம் எடுப்பதற்கும், ரோவருக்கு வழிகாட்டுவதற்கும் தேவையான கமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர்த்து ரோவரில் இணைக்கப்பட்டுள்ள ஐந்து கருவிகள் செவ்வாய் கிரகத்திலுள்ள பாறைகள் மற்றும் நீர் இருப்பை ஆய்வு செய்யும்.


இதுமட்டுமின்றி, செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சுற்றிவரும் விண்கலம் ஏழு தொலை உணர்வு கருவிகளின் மூலம் அதன் மேற்பரப்பு குறித்த ஆய்வில் ஈடுபடும்.


செவ்வாய் கிரகத்தில் நீண்ட நாட்கள் தாக்குபிடிக்கக் கூடிய ஆய்வு பணியை மேற்கொண்ட ஒரே நாடாக அமெரிக்காவின் நாசா திகழ்கிறது. 


இந்நிலையில்  விண்கலத்தில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் லேண்டரை களமிறக்குவது மிகவும் கடினமான செயல்முறையாக கருதப்படுகிறது. இதில் சீனா சிறப்பாக செயல்படுவதுடன், ரோவரை பாதுகாப்பாக தரையிறக்க முடியும் என்று நம்புகிறோம்" என்று இந்த விண்வெளி திட்டத்தின் ஊடகத்தொடர்பாளர் லியு டோங்ஜி கூறியுள்ளார்.


சீன விஞ்ஞானிகள் இந்த ரோவர் விண்கலம் குறைந்தது 90 செவ்வாய் நாட்களுக்கு செயல்படும் என்று நம்புகிறார்கள். செவ்வாய் கிரகத்தில் ஒரு நாள் அல்லது சோல் என்பது 24 மணி 39 நிமிடங்கள் நீடிக்கும்.


tianwen-1 என்ற பெயர்  சொர்க்கத்திற்கான கேள்விகள்" என்று அழைக்கப்படும் என சீன விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.