ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பிரபல நடிகர்!

 


கொரோனா பரவல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலகத்தைச் சேர்ந்த சில பிரபலங்கள் சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள்.


‘யுவரத்னா, ருஸ்தம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா மக்களுக்கு உதவுவதற்காக தற்போது ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியுள்ளார். ‘புரொஜக்ட் ஸ்மைல் டிரஸ்ட்’ என்ற அமைப்புடன் இணைந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார்.

இதுகுறித்து கூறிய அர்ஜுன் கவுடா, “நான் உரிய பயிற்சி எடுத்தும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன். உங்கள் வாழ்த்துகளால் நிறைத்துவிட்டீர்கள். மக்களுக்கு இப்படி சேவை செய்வதில் நான் பெருமை கொள்கிறேன்,” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.