முத்துக்குமாரின் தந்தை குமரேசன் மறைவு: சீமானின் கண்ணீர் வணக்கம்!

 


ஈழ போராட்டத்திற்கு குரல் கொடுத்து சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரின் தந்தை குமரேசன் உடல் நலக்குறைவினால் காலமானார்.


முத்துக்குமாரின் தந்தை குமரேசன் மறைவு: சீமானின் கண்ணீர் வணக்கம்

முத்துக்குமாரின் தந்தை குமரேசன் மறைவு: சீமானின் கண்ணீர் வணக்கம்

இதுகுறித்து நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர்தழல் ஈகி அன்புத்தம்பி வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களைப் பெற்றெடுத்த தந்தையார் அப்பா குமரேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என்றும் சொல்லும் அவர்,


முத்துக்குமாரின் தந்தை குமரேசன் மறைவு: சீமானின் கண்ணீர் வணக்கம்

நாம் தமிழர் கட்சி அரசியல் பேரியக்கமாக உருவெடுத்த இன எழுச்சி மாநாட்டிற்கு வருகை தந்த அவர், நடைப்பெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் களத்திலும் எம்மை ஆதரித்து, நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டுமென துணைநின்று வலுசேர்த்தவர் அப்பா குமரேசன் அவர்கள். அப்பா குமரேசன் அவர்களது மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி, ஈடுசெய்ய இயலாப் பேரிழப்பாக மாறியிருக்கிறது. இனத்திற்காக உயிரையே கொடையாகத் தந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனை ஈன்றெடுத்த அப்பா குமரேசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! என்று தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.