10 நாளாக உயிருக்கும் போராடும் யானை!

 


வுனியா, புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் யானைக்கு தொடர்ச்சியாக 10 ஆவது நாளாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

புளியங்குளம், புதூர் காட்டு பகுதியில் கடந்த 14 ஆம் திகதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் 12 வயது மதிக்கத்தக்க யானைக்கு இராணுவத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் கிராம மக்களின் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் காயமடைந்த குறித்த யானை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஆபத்தான நிலையில் அதனை காப்பாற்றும் நோக்கோடு குறித்த இடத்தில் பாதுகாப்பான தளம் ஒன்று அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வரும் நிலையில் ஒன்பதாம் நாளான நேற்று மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரதாபன், இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், மடுகந்தை பௌத்த துறவி மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையினை பார்வையிட்டனர்.

அத்துடன் குறித்த யானை விரைவில் குணப்படுத்த என்ன மாற்றுவழி செய்யலாம் என உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு, பௌத்த துறவியால் பிரித்தோதல் வழிபாடும் இடம்பெற்று யானைக்கு உணவுகளும் வழங்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.