'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு 'பிகில் நடிகையின் வாழ்த்து!!

 


விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சக போட்டியாளர்கள் வாழ்த்துக்களைத்  தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’பிகில்’ படத்தின் நடிகையும் அவருக்கு தனது சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்து, உங்களுக்கு இந்த வெற்றி எல்லாம் ஆரம்பம்தான் என்றும், இன்னும் போகப்போக நிறைய வெற்றிகள் உங்களுக்காக காத்திருக்கிறது என்றும்  வாழ்த்து தெரிவித்துள்ளார்


‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது அஸ்வின் நடித்த ஆல்பம் ஒன்று வெளியானது. ‘குட்டி பட்டாஸ்’ என்ற டைட்டில் கொண்ட இந்த ஆல்பத்தில் அஸ்வினுடன் ’பிகில்’ நடிகை ரெபா மோனிகா ஜான் நடனம் ஆடி இருந்தார் என்பதும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் யூடியூபில் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இன்று அஸ்வின் தனது பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து தனது டுவிட்டரில் அஸ்வினுக்கு ரெபா மோனிகா ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில், ‘ உங்களுக்கு  நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி பொங்க எனது வாழ்த்துக்கள். குட்டி பட்டாஸ் வெற்றி எல்லாம் ஆரம்ப வெற்றி தான். இதேபோல் உங்களுக்கு பல வெற்றிகள் தினம் தினம் வரும் என்பது சந்தேகமே இல்லை, மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று வாழ்த்தியுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.