உழைப்பாளர்தின கவிதை -தமிழி!!

 


அனுதினமும் அயராது உழைத்தும்

அடிப்படை தேவைகளுக்குக் கூட

அல்லாடுகையில் ஆலைகள் மட்டும்

ஆண்டு தோறும் வளர்வதெப்படி

சிந்திக்கவும் மறந்து செக்குமாடுகளாகச்

சுழன்றும் கூட சோற்றுக்கு

இலவச அரிசியை எதிர்நோக்கி

இருக்கையில்

சேவை செய்ய வருவதாகச் 

சொல்லி ஐந்தாண்டுகளில்

செல்வந்தர்களின் பட்டியலில்

சேர்ந்து விடுகிறார்களே எப்படி

சமநிலைக்கான சூட்சுமமும் கூட

ஒரு போதும் உங்களால் கேட்கப்படாத

இவ்வினாக்களுக்குள் தான்

சிறை பட்டுக் கிடக்கிறது

சகோதரர்களே

உழைத்தவனுக்கு உருவானவற்றில்

உரிமையுண்டு என்பதை

உணர முற்படுங்கள். 

வினாக்கள் தான்

விடுதலைக்கான முதற் புள்ளி

ஏனிந்த அசம நிலை என்ற

வினாவோடு விடியட்டும்

இன்றைய நாள். 

உழைப்பாளர் தின வாழ்த்துகள்



தமிழி


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.