சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிய பெரும் தொகை தங்கம்!


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 317 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இத்தகவலை சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப்பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.

26 கிலோ எடையுள்ள குறித்த தங்கமானது பிஸ்கட்களாகவும் ஆபரணங்களாகவும் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கட்டாரிலிருந்து வருகை தந்த பயணி ஒருவரால் விமான நிலைய கழிவறைக்குள் வைத்து, மிக சூட்சுமமாக விமான நிலைய சுத்திகரிப்பு பணி தொழிலாளரிடம் கொடுத்து தங்கத்தை வௌியில் கொண்டு செல்ல முயற்சித்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தங்கத்தை வௌியில் கொண்டு செல்ல முயற்சித்த சுத்திகரிப்பு பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுதந்த சில்வா மேலும் கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.