இளம் குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து மரணம்!

 


மன்னார்- இலுப்பைக்கடவை படகு துறை பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளமை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


இந்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் இலுப்பைக்கடவை பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான வினோதன் (வயது-34) என்பவரே உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


குறித்த குடும்பஸ்தர், இலுப்பைக்கடவை படகு துறை கடற்கரை பகுதியில், மீன் வலை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளையில் திடீர் என மயங்கி விழுந்துள்ளார். இதன்போது அருகில் இருந்தவர்கள் அவசர அம்புலன்ஸ் ஊடாக அவரை பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.