யாழ். மாநகர முதல்வரின் முயற்சியில் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க புதிய அமைப்பு!

 


‘யாழ்ப்பாணம் மரவுரிமை மையம்’ என்னும் பெயரில் 11 அங்கத்தவர்களுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய அமைப்பொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.


யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றைப் பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்வது இந்த அமைப்பின் நோக்கமாகும்.


மரவுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பினை நிறுவுவதற்கு யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முயற்சியை மேற்கொண்டிருந்தார்.


இந்நிலையில், மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குறித்த, யாழ்ப்பாணம் மரவுரிமை மையத்தின் தலைவராக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


அத்துடன், உப தலைவர்களாக வைத்திய கலாநிதி பேராசிரியார் ரவிராஜ் மற்றும் நடராஜா சுகிதராஜ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக மருத்துவபீட பதிவாளர் ராஜேந்திரம் ரமேஸ் மற்றும் துணைச் செயலாளராக பாசுப்பிரமணியம் கபிலன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.


மேலும், பொருளாளராக பேராசிரியர் செல்வரட்ணம் சந்திரசேகரம், இணைப்பாளராக சிவகாந்தன் தனுஜன் மற்றும் பதிப்பாசிரியராக வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன், யாழ்ப்பாணம் மரவுரிமை மையத்தின் உறுப்பினர்களாக விஸ்வலிங்கம் மணிவண்ணன், விஸ்வபாலசிங்கம் மணிமாறன், பூவானசுந்தரம் ஆரூரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


இதேவேளை, பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த அமைப்பு வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதுடன் எதிர்காலத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அனைத்திலும் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பித்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.